மனோபாலா காலமானார்!

Filed under: சினிமா |

இயக்குனரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா இன்று திடீரென காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி கடந்த 1980களில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோபாலா. ரஜினிகாந்த் நடித்த “ஊர்க்காவலன்” உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். அதேபோல் சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார். “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்குபெற்றார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால, மனோபாலா சற்றுமுன் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மனோபாலாவுக்கு வயது 69.