பாஜக மகளிர் அணி தலைவி “பிரதமரை எதிர்த்து நீங்களே போட்டியிடலாமே?” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மகளிர் அணி தலைவர் அக்னிமித்ர பால் “மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை எதிர்த்து இந்தியா கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறிய நிலையில் பாஜக மகளிர் அணி தலைவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரியங்கா காந்தி இடத்தில் மம்தா போட்டியிட வேண்டும் என்றும் அவருக்கு பிரதமர் ஆகும் விருப்பம் இருக்கும் நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து அவரே போட்டியிட வேண்டும் என்றும் அவருக்கு அவ்வளவு துணிச்சல் இருக்கிறதா பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.