மய்யத்தில் மற்றொரு விக்கெட்!

Filed under: அரசியல் |

மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில செயலாளரான சரத்பாபு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் 4 ஆண்டுகளுக்கும் மேலானது. கட்சியில் சேர்ந்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள். தற்போது கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட சரத்பாபு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது முற்றிலும் ஈடுபாடு குறைந்து வருவாய் ஈட்டும் மனநிலைக்கு அவர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியுள்ள சரத்பாபு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.