மருத்துவக் குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தும் முதலவர் ! மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

மருத்துவக் குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தும் முதலவர் ! மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

மத்திய அரசு அறிவித்துள்ள நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் தமிழக முதல்வர் மருத்துவக் குழுவினருடன் இன்று இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய இருக்கிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு எதுவும் இன்னமும் அறிவிக்கவில்லை. இதனால் ஐந்தாவது ஊரடங்கைப் பற்றி முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசிக்க இன்று இரண்டாவது முறையாக மருத்துவர் குழுவை சந்திக்க உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ள இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.