மருத்துவர்களுக்கு நன்கொடை வழங்கிய அஜித் பட நாயகி!

Filed under: சினிமா |

ஏப்ரல் 29

மருத்துவர்களுக்கு 1000 PPE கிட்களை நன்கொடையாக அளித்த நடிகை வித்யாபாலன். அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் தற்போது மருத்துவர்களுக்கு PPE கிட்களை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கொரோனாவுக்கு எதிரான போரில் நமது மருத்துவர்களின் பணி மிகவும் மகத்தானது. அவர்கள் நமது எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு இணையானவர்கள். இந்த நிலையில் இந்தப் போரில் ஈடுபட்டிருக்கும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்துள்ளேன் அவர்களுக்காக நான் 1000 PPE கிட்களை அளித்துள்ளேன். இந்தக் கிட்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நாடு முழுவதும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.