மர்மமாக சுற்றிய சிறுவன்!

Filed under: தமிழகம் |

மர்மமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை போலீசார் பிடித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமாக சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவர் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி போலீசார் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் மெட்ரோ ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிறுவனை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்றும், வீட்டில் சண்டையிட்டு கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள்ளேயே சுற்றி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் யார் என விசாரித்து அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். சாப்பிடாமல் சுற்றி திரிந்த சிறுவனுக்கு சுவையான பிரியாணி வாங்கி கொடுத்த போலீசார், பெற்றோர் வந்ததும் அவர்களிடம் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.