மறைந்த நடிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

Filed under: சினிமா |

கபடி வீரராக 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன்.

அதன் பின் “குள்ளநரிக் கூட்டம்” உட்பட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் சில் தினங்களுக்கு முன்னர் அவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவரோடு “வெண்ணிலா கபடி குழு” மற்றும் “குள்ளநரிக் கூட்டம்“ ஆகிய திரைப்படங்களில் நடித்த விஷ்ணு விஷால் ஹரி வைரவனின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.