மலேசிய தமிழர்களின் அட்டகாச தமிழ்ப்படம்!

Filed under: உலகம்,சினிமா |

Adutha_Kattam_Movie_Trailer_Launch_Stillsd64cb84c60c8a98993e6b8136110a039 (1)தமிழனாய் பிறந்தவன் எந்த நாட்டிலும் நிச்சயம் சாதனை படைப்பான். அது தமிழன் ரத்தத்தின் வீரியம். மலேசியத் தமிழர்கள் மலேசியாவிலேயே ஒரு தமிழ்ப்படத்தை உருவாக்கி வெற்றி சாதனை படைத்துள்ளனர். படத்தின் பெயர் அடுத்த கட்டம். மலர்மேனி பெருமாள், அகோர்திரன் சகாதேவன், காந்திபன் நடிப்பில் ஜெய்ராகவேந்திரா இசையில் ரஞ்சன் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, முரளிகிருஷ்ணன் முனியன் இயக்கிய இந்தப்படம் இளம் பெண் ஒருத்தி கடத்தப்பட்டு அவளை மீட்கச் சென்ற அவளின் கணவனும் சிக்கி மரண எல்லையை தொட்டு உயிர் மீள்கிறார்கள். காட்சியில் பரபரப்பு. இசையில் அதிர்ச்சி. கதாநாயகி மலர்மேனியின் உருக்கமான நடிப்பு நாங்களும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை அடித்து சொல்லியிருக்கிறார்கள். அடுத்த கட்டம் சூப்பர் பயங்கரம்.