கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சனை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்!

Filed under: சினிமா |

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகனும் மற்றும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதள பிராத்தனை செய்து வருகின்றனர்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய உடல் நலம் பற்றி நலம் விசாரித்துள்ளார்.

இன்று அபிஷேக் பச்சனின் மனைவியும் மற்றும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய எட்டு வயது மகளான ஆராத்யாவிற்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.