மல்யுத்த போட்டிக்கான உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ்!

Filed under: உலகம்,சினிமா,விளையாட்டு |

நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் பிரபலமான மல்யுத்த போட்டிக்கான தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரூ.41,445 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.

டபிள்யூ டபிள்யூ ஈ எனப்படும் குத்துச்சண்டை உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது மிகப்பெரிய அரங்கில், மில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு, டிரிப்பிள் எச், ரோமன் எம்பையர், ஜான் சீனா, பிராக் லெஸ்னர். பட்டீஸ்டா, ரை மிஸ்டீரியோ, பிக்ஷோ உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டில், ரா, ஸ்மேக் டவுன் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இவை குறிப்பிட்ட கிழமை மற்றும் நேரங்களில் டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. உலகளவில் பிரபலமான மல்யுத்த போட்டியான டபிள்யூ டபிள்யூ ஈ தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.41,445 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரியிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நெட்பிளிக்ஸ் ஒளிப்பரப்பாக உள்ளது.