மஹாராஷ்டிரா போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுமா?

Filed under: அரசியல்,தமிழகம் |

மஹராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழ வாய்ப்பிருப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 40 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநிலத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுக்கூடும் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிலிருந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதன் பின்னர் திமுக என கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கட்சியில் சேர்ந்த ஒரு சில மாதங்களில் அமைச்சராகிவிட்ட செந்தில் பாலாஜி தற்போது முதலமைச்சரின் குடும்பத்திற்கு நெருக்கமானவராக இருப்பதாக கூறப்படுகிறது. செந்தில்பாலாஜி கைவசம் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் மஹாராஷ்ட்ராவில் நடந்தது போன்று தமிழகத்திலும் ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா கூறியிருக்கிறார். இவரது பேச்சு கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.