மாணவியை மணமுடித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!

Filed under: தமிழகம் |

12ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற 21 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இந்த காதல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து அஜித் மற்றும் 12ம் வகுப்பு மாணவி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து மூன்று நாள் குடும்பம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜித் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அஜித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் அவதாரம் விதிக்கப்பட்டது.18 வயதுக்கு குறைவான பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.