“மாமன்னன்” ஐரோப்பிய ரிலீஸ் உரிமை யாருக்கு?

Filed under: சினிமா |

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது “மாமன்னன்” திரைப்படம்.

இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” திரைப்படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரெயிலர் ரிலீஸ் நடந்தது. திரைப்படத்தின் சிறப்பான டிரெயிலர் சமூகவலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து 10 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “மாமன்னன்” திரைப்படம் ரிலீசாக உள்ளது. படத்தின் வெளிநாடு வியாபாரம் இப்போது தொடங்கியுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த ஐரோப்பிய வெளியீட்டு உரிமையை அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய்யின் “லியோ” ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றியுள்ளது.