மாரி செல்வராஜின் ஆவேச பதிவு!

Filed under: சினிமா |

இயக்குனர் மாரி செல்வராஜ் நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல் குறித்து தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.

நெல்லை நாங்குநேரியிலுள்ள பள்ளியில் ஜாதி ரீதியான மோதல் காரணமாக ஒரு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மாமன்னன் உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்கிறார் தனது டுவிட்டரில் இது குறித்து, “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என்று தனது ஆவேசத்தை பகிர்ந்துள்ளார்.