மாலத்தீவில் ரஜினிகாந்த்!

Filed under: சினிமா |

சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான “லால் சலாம்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆகஸ்ட் 10ம் தேதி “ஜெயிலர்” திரைப்படமும் அதனை அடுத்து ஒரு சில மாதங்கள் கழித்து “லால் சலாம்” திரைப்படமும் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலத்தீவு சென்றுள்ளார். இத்தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினியின் புகைப்படத்தை பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அனேகமாக நாளை ரஜினிகாந்த் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.