மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

Filed under: தமிழகம் |

12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டு எஸ்பி ஆக பகலவன் அவர்கள் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவி மரணம் விவகாரத்தில் ஒரு மாவட்டத்தில் எஸ்பி மற்றும் கலெக்டர் ஆகிய இருவருமே மாற்றப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது