மின்இணைப்பு மோசடி குறித்து டிஜிபி எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

டிஜிபி சைலேந்திரபாபு ஆதார் எண் மற்றும் மின் இணைப்பு எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு குறித்து சில மோசடி நடந்து வருவதாகவும் அது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களை இணைக்காமல் இருந்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று சில மோசடி பேர்வழிகள் செல்போனுக்கு லின்க் அனுப்புவார்கள். அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுவரை ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்கள் 1930 என்ற எண்ணிற்கு புகார் அளிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களை இணைப்பதற்கு தமிழக அரசின் மின் வாரியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை நாட வேண்டும். அல்லது நேரடியாக மின் அலுவலகத்திற்கு சென்று ஆதார் மின் இணைப்பு எங்களை இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.