மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி மியான்மர் நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஆங் சான் சுகிக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் நடந்த வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வந்த 77 வயதான ஆங் சான் சூகி தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார். ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டிய ஆன் சான் சூயி, கடந்த 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றார். இதை மறுத்து, ராணுவத்தினர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, கடந்தாண்டு பிப்ரவரியில் ஆட்சி கலைக்கப்பட்டது. எனவே ஆங் சான் சூயி வீட்டு காவலில் வைக்கப்பட்டார். ராணுவத்திற்கு எதிராகக் போராட்டத்தை தூண்டியது, கொரொனா கால விதிகளை மீறியது, அவர் ஆட்சியில் நடந்த ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், ஆங் சன் சூயின் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறை வழங்கியது. இதையடுத்து, அவருக்கு பல்வேறு வழக்குகள் மீதான வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, தேர்தல் மோசடி வழக்கில் அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.