மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

Filed under: தமிழகம் |

மர்ம நபர்கள் மிரட்டல் கடிதத்தில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று பொள்ளாச்சியிலுள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என எழுதப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ குமரன் நகர் பிஎப்ஐ குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல் நிலையத்திற்கு வந்த இக்கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் குறிப்பாக தற்போதுள்ள சூழ்நிலையை வேறு யாரும் தவறுதலாக பயன்படுத்தி திசை திருப்பும் நோக்கில் பண்ணுகின்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.