கோவிட்-19: மிஷன் சாகர் !

Filed under: இந்தியா,உலகம் |

புது டெல்லி,மே 11

உலக அளவிலான பெரும் தொற்றான  கோவிட்-19 நோய் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற இந்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கேசரி என்ற கப்பல், மாலத்தீவு, மொரீஷியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர், காமராஸ் ஆகிய நாடுகளுக்கு உணவுப்பொருள்கள், ஹைட்ரோகுளோரிக்வின் மாத்திரைகள் உட்பட, கோவிட்-19 தொடர்பான மருந்துகள், சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக் குழுக்களுடன் 2020, மே10 அன்று புறப்பட்டுச் சென்றது. மிஷன் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உதவித் திட்டம், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், நோயின் பாதிப்பினால் ஏற்பட்ட சிரமங்களுக்கும், இந்த மண்டலத்தில், முதல் குரல் கொடுப்பதாகவும், இந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான மிகச்சிறப்பான உறவுகளை வலுப்படுத்துவதாகவும் உள்ளது.

நமது மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்திற்கு ஏற்ப (Security and Growth for All in the Region ‘SAGAR’ ) இந்த மிஷன் சாகர் உள்ளது. தனது அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு, இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை, இது எடுத்துக்காட்டுகிறது தற்போதைய உறவுகளை இது மேலும் வலுப்படுத்துகிறது. மத்தியப் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சகங்கள், இந்திய அரசின் மற்ற முகமைகள் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்போடு இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிஷன் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படை கப்பல் கேசரி, மாலத்தீவு மக்களுக்கு, 600 டன் உணவுப்பொருள்கள் அளிப்பதற்காக மாலத்தீவு குடியரசின் மாலே துறைமுகத்துக்குச் செல்லும். இந்தியாவும் மாலத்தீவும், வலுவான, மிகவும் மரியாதைக்குரிய வகையிலான பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகள் கொண்ட மிக நெருங்கிய கடல்வழி அண்டை நாடுகள் ஆகும்