மீண்டும் இணையும் இயக்குனர் ஹரி – விஷால்

Filed under: சினிமா |

நடிகர் சூர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த “அருவா” திரைப்படம் திடீரென டிராப்பானது. இப்படத்தின் இடைவேளைக்குப் பிறகு கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும், ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

அதனால் திரைத்துறையில் அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம் ரிலீசாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதற்குள் விஷால் மார்க் ஆண்டனி படத்தை முடித்துவிட்டு வருவார் என கூறப்படுகிறது.