மீண்டும் இணையும் மங்காத்தா டீம்!

Filed under: சினிமா |

இயக்குனர் வெங்கட் பிரபு தனது குழுவினருடன் சேர்ந்து சிறிய திரைப்படங்களையே உருவாக்கி வந்தார். அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை வெங்கட்பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கினார். அப்போது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றளவும் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவே உள்ளது.

2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியான இந்த படம் சமீபத்தில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி அஜீத்தின் குடும்ப நண்பராக இருந்து வருகிறார். “மங்காத்தா” படத்தின் போதே அவர் அஜீத்தோடு மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக இருந்ததாம். ஆனால் அது இப்போதுவரை கைகூடவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் அஜீத்தை வைத்து படம் தயாரிக்க துரை தயாநிதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.