மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி!

Filed under: அரசியல்,இந்தியா |

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, இப்போது முதல் முறையாக ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது ஐந்தாம் கட்ட ஊரடங்கு. இந்நிலையில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாநில முதல்வர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இதற்காக டிவிட்டரில் ‘ஜூன் 16ஆம் தேதி 3 மணி அளவில், பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா, இமாச்சலப் பிரதேஷ், சண்டிகர், கோவா, மணிப்பூர், நாகாலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் , அந்தமான் & நிகோபார், தாரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, சிக்கிம், லட்சத்தீவு ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

அடுத்த நாளான ஜூன் 17ஆம் தேதி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களான, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திர பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.