மீண்டும் ஒரு பிரம்மாண்டம்!

Filed under: சினிமா |

தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் ரஜினி மற்றும் கமலஹாசன்.

சூப்பர் ஸ்டாரும், உலகநாயகனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே அவரவரது ஸ்டைலில் நடிக்க ஆரம்பித்தனர்.
இனிமேல் இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடிப்பில் “விக்ரம்“ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில், கமலஹாசன் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் இணைந்து ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இப்படத்தையும் கமலின் ராஜ்கால் இண்டர்னெஷனல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.