சம்பளத்தை உயர்த்திய லோகேஷ்!

Filed under: சினிமா |

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரூ.200 கோடி ரூபாய் வசூலித்த படம் தான் “பீஸ்ட்”.

இதையடுத்து, விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் விஜய்யின் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ளது.

விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டது.
இப்படத்தில் திரைக்கதை உருவாக்கத்தில் “மேயாத மான்” மற்றும் “ஆடை” ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் பங்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து பிரம்மாண்ட வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “விக்ரம்“ இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்67 படத்தை இயக்குவதற்கு ரூ.10 கோடி சம்பளம் பெறுவார் எனவும், கமல் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ள லோகேஷுக்கு ரூ.15 கோடி சம்பளம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ‘’விஜய்67’’ படத்தை இயக்க அவருக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் ஷங்கர் உள்ளிட்ட சீனியர் இயக்குனர்களுக்கு அடுத்து, அதிக சம்பளம் பெறும் இயக்குனராக லோகேஷ் உயர்ந்துள்ளார்.