மீண்டும் வில்லன் அவதாரத்தில் கமல்..

Filed under: சினிமா |

Kamal-Haasanஉத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன். விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார். இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார். இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் சதிலீலாவதி படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன். மேலும் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் கொமடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் என கலந்து உருவாகவிருக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் ரசிகர்களை ரொம்ப கவரும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.