மீண்டும் வொர்க் ப்ரம் ஹோமா?

Filed under: உலகம் |

பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் என்று அறிவித்துள்ளது. ஆம். உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று காலை கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அலுவலகம் செல்ல வேண்டியவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக சூறைக்காற்று காரணமாக மரங்கள் சாலையில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.