யூடியூப் இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் உட்பட உலகம் முழுதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியதாக அறிவித்துள்ளது.

யூடியூப் நிர்வாகம் சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்களின் சமூக வழிகாட்டுதலை மீறுதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன, அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே 19 லட்சம் இந்தியர்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 6 லட்சத்து 54,968 வீடியோக்களும், ரஷ்யாவில் இருந்து 4,91,933 வீடியோக்களும் பிரேசில் நாட்டிலிருந்து 4,49,759 வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது” என்று யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது - வணிகத்துறை அதிகாரிகள் கருத்து!
பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி
கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் - அதிபர் புதின் ...
இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!



