மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து!

Filed under: தமிழகம் |

வெள்ளி நகைக்கடை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் செயல்பட்டு வந்தது. கடை இன்று வழக்கம் போல் மதிய உணவுக்கு ஊழியர்கள் கடையை அடைத்து சென்ற பொழுது திடீரென்று கடையில் உள்ளிருந்து கரும்புகை வெளியானது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீ அடுத்தடுத்து பரவாதவாறு தீயை அணைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து கடையினுள் குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.