முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெரிய அணியை திரட்ட வேண்டும் என பல தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல தேசிய தலைவரை சந்தித்து வருகிறார். அதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தேசியளவில் ஒரு அணியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஒரு சில தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாஜக எதிர்ப்பு சக்திகளை ஓரணியில் திரட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அகில இந்திய பார்வையுடன் அரசியல் காய்களை அவர் நகர்த்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.