முதலமைச்சரை சந்தித்த சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்!

Filed under: தமிழகம் |

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விஜய் டிவியின் 2022ம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கிரிஸ்ஸாங் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வருடா வருடம் விஜய் தொலைக்காட்சி ஜூனியர் மற்றும் சீனியருக்கான சூப்பர் சிங்கர் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், கடந்த 2021ம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் 8 ஆரம்பித்தது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 27ம் தேதி நடந்தது. இதில், ரிஹானா இரண்டாம் இடமும், நேஹா 3ம் இடமும், கிரிஸ்ஸாங்க் முதல் இடமும் பெற்றனர். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கிரிஸ்ஸாங் தன் குடும்பத்தினருடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.