முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர் ரவி கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக ஆளும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது குறித்தும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவரை வலியுறுத்தி இன்று பேரவையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அரசின் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று முன்மொழிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.