முதலமைச்சர் நிவாரணம்

Filed under: தமிழகம் |

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகையில் நடைபெற்ற சப்பரத் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் நடந்த சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாகை மாவட்டம் உத்திராபதீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி தீபராஜன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.