கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

மருத்துவமனையில் வேலையின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூபாய் 5 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு வேளையில் பணிபுரிந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா சென்ற 27ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த தகவல் அறிந்த உடன் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை எதிர்த்து தன்னலம் கருதாமல் வேலை பார்த்த ஜோன் மேரி பிரிசில்லா சேவையை போற்றும் வகையில் அவருடைய குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.