முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஈபிஎஸ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து செய்தியாளர்களிடம் “கள்ள சாராயம் குடித்தவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லி போய் வருவது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பொம்மை முதலமைச்சர் மற்றும் திறமையற்ற முதலமைச்சர் ஆளுகின்ற மாநிலத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முன்கூட்டியே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மரணத்தை தடுத்திருக்கலாம். இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.