முதலமைச்சர் ஸ்டாலின் சிவாஜி மணிமண்டபத்தில் ஆய்வு!

Filed under: சென்னை |

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரிடன் கோரிக்கையை ஏற்று, சிவாஜி மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.