முதலிடம் பிடித்தார் பிரதமர் மோடி!

Filed under: அரசியல் |

நம் நாட்டின் பிரதமர் மோடி உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு, உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்திருந்தார். இந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் ஆளுமையை 75% பேர் ஆதரவளித்துள்ளனர். மெக்சிகோ அதிபர் ஆண்டர்ஸ் இமானுவேல் (63% )ஆதவுடன் இரண்டாவது இடமும், இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி(54) 3 வது இடமும், பிரெசில் அதிபர் ஜெர் பால்சனாரோ (42) 4 வது இடமும், அமெரிக்க அதிபர்( 41%) 5 வது இடமும் பிடித்துள்ளனர்.