முதல்வரோடு மோதும் இலங்கை அதிபர்!

IMG_4531இலங்கை அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொச்சைப்படுத்தப்பட்ட விமர்சனங்களை அனுமதித்தது உலக நாடுகளின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இலங்கை அதிபரின் ஆணவம் தமிழ் துரோகிகளால் மெருகேற்றப்பட்டு, இந்திய அரசின் சுயநல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து உலவுகிறது.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க பதுங்கும் தமிழக அரசியல் கோழைகள், இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் இந்த விமர்சனங்களால் அலறும் இலங்கை அரசியல்வாதிகள், ஜெயலலிதாவின் பெயரை கேட்டால் கால்களில் சுடுநீர் கொட்டுவதுபோல் தவிக்கிறார்கள் என்ற தகவல்கள் இலங்கையில் வெளியாகி உள்ளது. தமிழ் குலத்தை அழித்து அமெரிக்க நட்பினை நாடிய தமிழ்துரோகிகள், அமெரிக்கா தமிழக முதல்வருக்கு ஆதரவு தந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம். தற்போதைய பா.ஜ.க. அரசின் தமிழின துரோக அரசியல்வாதிகளின் ஆதரவு கொண்டு இலங்கை அதிபரை உசுப்பிவிட்டுள்ளார்கள் என்ற வதந்தி உலவுகிறதாம். அளவற்ற செயல்களை செய்த இந்த தமிழ் அறிவாளிகளுக்கு ஆப்பும் ரிவிட்டும் அடிக்கப்பட்டு, தமிழக மண்ணிலிருந்து ஓடுகின்ற சூழ்நிலை வெகுவிரைவில் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறார்களாம்.

தமிழ் குலத்திற்கு எதிராக சுயநல அரசியல்வாதிகள், தமிழக அறிவாளிகள், கறைபடிந்த அதிகாரிகளை இலங்கை அரசு பயன்படுத்தி, தமிழ்குலத்தை பிளக்க நினைத்தது என்கிறார்கள். அதற்கு 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி உதவியதாகவும் கூறப்படுகிறது. தற்போது பா.ஜ.க.விலும் இலங்கை அதிபர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தத்தொடங்கிவிட்டார்.
மேலும் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களை வளைத்து போடும் திட்டமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் முக்கிய இளம் நடிகர் சிக்கியதாக வதந்திகள் உலவுகிறது. உண்மையில் தமிழகத்தை அழிக்க நினைத்த அரசியல்வாதிகள் ஆன்மிக தமிழக மக்களால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு தலைகுனிந்து நிற்கிறார்களாம். இலங்கை பிரச்னையில் அமரர் ராஜிவ்காந்தி அவசரப்பட்டு எடுத்த தவறான முடிவால் தமிழ்குலம் இன்று அழியும் நிலைக்குகொண்டு சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.

ஜெயலலிதாவின் காலடியில் இலங்கை அதிபர் மண்டியிட்டு வேண்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று உணர்ச்சி கொப்பளிக்க எழுகிறது. தமிழ் சமுதாயம். இன்று தமிழகத்தில் ஜெயலலிதா இல்லை என்றாலே தமிழகம் இலங்கைக்கு அடிமைப்பட்டு கிடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று தலைநகர அரசியல்வாதிகள் கூறுகிறார்கள்.

இந்திய விளையாட்டுத்துறை உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது. காரணம் பத்து ஆண்டுகள் ராகுல்காந்தியின் அடிவருடிகளால் அடக்கிவைக்கப்பட்ட இந்திய விளையாட்டுத்துறை தற்போது இந்திய உணர்வுகள் வீறுகொண்டு எழுந்து வெற்றிபெற்று நிற்கிறது. இந்திய விளையாட்டு வீரர்கள் இந்திய மண்ணில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அடக்கி வைக்கப்பட்டு, தலைகுனிந்து அவமானப்பட்டு நின்ற காலம் உண்டு. தற்போது இந்திய வீரர்கள் சுயமாக சுதந்திரமாக தங்கள் திறமையினை காட்டி வெற்றிபெற்று இந்திய தாய்க்கு மகுடம் சூட்டி உள்ளனர்.

மேலும் தமிழக முதல்வரின் விளையாட்டு ஊக்குவிப்பு தொகை இந்திய அரசியலை அடியோடு மாற்றிவிட்டது. இந்திய நீதித்துறையில் தமிழக முதல்வர் நடந்துகொண்ட விதம், இந்திய நீதிபதிகளை அதிகம் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மத்திய அரசு நீதித்துறையை தன் விருப்பப்படி ஆட்டிவைக்க நிரபராதிகளை தண்டித்த நிகழ்ச்சிகள் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்தும் உலவுகிறது.

உண்மையில் தமிழக முதல்வரை எதிர்க்கும் சக்திகள் தற்போது தமிழக கறைபடிந்த அமைச்சர்களை வளைக்கத்திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள இடைநிலை மற்றும் கடைநிலை அதிகாரிகளை பயன்படுத்தி, தமிழக முதல்வரின் திட்டங்களை முடிந்தவரை தாமதப்படுத்தி பொதுமக்களை எரிச்சலடைய செய்ய முயற்சி நடந்து கொண்டிருப்பதாக தலைநகரில் செய்திகள் உலவுகின்றன.

சமீபத்தில் குஜராத் மாநிலம் உலக புராதான சின்னமாக தேர்ந்து எடுக்கப்பப்டது. உண்மையில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்தான் கணக்கில் எடுக்கப்பட்டதாம். தஞ்சாவூர், மயிலாடுதுறை அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் மற்றும் ஆணவப்போக்கினால், தஞ்சாவூர் புராதான சின்னத்தை புறக்கணிக்க நேர்ந்ததாக உலகத்தமிழர்கள் குமுறுகிறார்கள். இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆட்சியாளர் இல்லாததால், அவரது ஆணைக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என்ற கருத்து உலவுகிறது. தமிழக முதல்வரின் கட்டளைகள், ஆணைகள் தமிழக மக்களுக்கு சென்றடைய தாமதப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த முயற்சி செய்யப்படுகிறது.