முதல்வர் முன்னாள் சபாநாயகர் மறைவுக்கு இரங்கல்!

Filed under: தமிழகம் |

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு வயது 75 ஆகும். இவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில், “அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கபப்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி திரு, முத்தையா அவர்கள் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். அண்மையின் மதுரை சென்றிருந்த போது, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திரு.முத்தையா அவர்களை சந்தித்து நலம் விசாரித்த வந்தேன். இன்று சிகிச்சை அவர் மறைந்த செய்தி தற்போது வந்தடைந்தது வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் கும்பத்தினருக்கு கழக உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.