முன்னாள் நிதியமைச்சரின் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை என்பதாலும் தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதாலும்தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ப சிதம்பரம், “பாஜக ஆளும் மாநிலங்களில் வேலையில்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து எவரும் வேலை இல்லாமல் அங்கே செல்வதில்லை. பெரியார் காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக” என்று வட இந்தியர்களின் தமிழக வருகை குறித்து கூறியுள்ளார்.