முன்னாள் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

முன்னாள் பிரதமர் ஒருவர் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்- மற்றும் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படாது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த போது “இந்தியாவில் பாஜக அரசாங்கம் மிகவும் கடுமையானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லுறவை நாங்கள் விரும்பினாலும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டி விடுவதால் இரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்வு காண வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது. நான் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன்” என்று கூறினார்.