மும்பை ஐஐடி வெளியிட்ட ஆச்சர்யமான தகவல்!

Filed under: இந்தியா,தமிழகம் |

ஐஐடி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு என்னவென்றால், எந்த மாநிலத்தில் அதிக கோவில்கள் உள்ளன என்பதுதான்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல கடவுள்களுக்கும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலும் இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோவில்கள் அவர்களின் நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உள்ள நிலையில் ஏராளமான கோவில்களும் நாடு முழுவதும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் மும்பை ஐஐடி எந்த மாநிலத்தில் அதிகமான கோவில்கள் உள்ளன என ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவ்வாய்வில் அதிகமான கோவில்கள் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மும்பை ஐஐடி வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி தமிழ்நாடு முழுவதும் 79,154 கோவில்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய கோவில்கள், குலதெய்வ கோவில்கள், கிராமங்களில் உள்ள கோவில்கள் இடம்பெற்றுள்ளதா என்பது கூறப்பட்வில்லை.