மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மேசெஜால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தொடர் தாக்குதல் நடந்தது போல் மீண்டும் ஒரு தொடர் தாக்குதல் நடைபெறும் என மெசேஜ் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. தாஜ் ஹோட்டல் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 175 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது 2008ம் ஆண்டு நவம்பர் 26 தாக்குதலை போல் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் மும்பையில் நடக்கும் என பாகிஸ்தானைச் சேர்ந்த செல்போன் எண்ணில் இருந்து மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மெசேஜ் வந்து உள்ளது. இந்த மெசேஜ் குறித்து விசாரணை நடந்து வருவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. மீண்டும் தாக்குதல் என்ற தகவல் மும்பை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.