பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை காவலர்களுக்கு ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக அளித்து உள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மும்பை காவலர்கள் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் சல்மான் கான் ஒரு லட்சம் சானிடைசரை வழங்கியுள்ளார். இந்த உதவிக்கு நடிகர் சல்மான் கானுக்கு மகாராஷ்டிரா முதல்வர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு உத்தரவு சமயத்தில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு சல்மான்கான் பல உதவிகளை செய்து வருகிறார். இந்தி திரையுலகில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ம்,முதல் முதலில் நிதி உதவி சல்மான்கான் வழங்கியுள்ளார்.