மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

Filed under: தமிழகம் |

மு.ராஜேந்திரனுக்கு 2022ம் ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்கிய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு, காலாபாணி என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், எழுதிய காலாபாணி என்ற நாவல் காளையர் கோயில் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாகும். எனவே, எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.