ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது பற்றி இரண்டு நாட்களில் முடிவு அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது பற்றி முதலமைச்சருடன் கலந்துரையாடல் செய்து இரண்டு நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது: தமிழ்நாட்டில் பள்ளிகள் தற்போது திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிக்கூடங்களைத் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது பற்றி இரண்டு நாட்களுக்குள் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.