சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்திலிருக்கும் முதாட்டி பாப்பாயி (90)யின் மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லை கொடுத்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மூதாட்டி பாப்பாயி வீட்டில் படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார். இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.