மூதாட்டியை மரியாதை குறைவாக நடத்திய நடத்துநர்!

Filed under: தமிழகம் |

மூதாட்டி ஒருவரை அரசுப் பேருந்து நடத்துனர் கவுரவக் குறைவாக நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் இருந்து 34/கி என்ற அரசுப் பேருந்து இயங்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தில் இன்று பயணித்த மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூர் சென்றார். அதே பேருந்தில் மீண்டும் திரும்பியுள்ளார். அப்போது, நடத்துனர் மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதை ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலாகி உள்ளது.