மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கம்!

Filed under: உலகம் |

பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மெட்டா நிறுவனமும் பணி நீக்கம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரும்பாலும் இளைஞர்களின் கனவாக உள்ளது முன்னணி ஐடி நிறுவனங்களின் வேலைதான். ஆனால், சமீபகாலமான உலகளவில் பொருளாதார மந்தநிலை பணவீக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள், ஆல்பா, ஆரக்கில், உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பெருமளவில் வேலை நீக்கம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 11 ஆயிரம் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா வேலை நீக்கம் செய்தது. இதையடுத்து, மேலும், 13 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டன் மெட்டா நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு முதல் சுமார் மெட்டா நிறுவனம் 21,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.