மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

Filed under: உலகம் |

மைக்ரோசாப்ட் இவ்வாண்டு சம்பள உயர்வில்லை என அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இவ்வாண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில்லை என்று மைக்ரோசாப்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த முடிவுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வில்லை என்றாலும் போனஸ், பங்கு ஒதுக்குதல், பணி உயர்வு போன்றவை இருக்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இவ்வறிக்கை இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.